கோவை மாவட்ட ஆட்சியரை அதிமுக எம்.எல்ஏக்கள் அதட்டிய விவகாரம்: திமுகவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

கோவை மாவட்ட ஆட்சியரை அதிமுக எம்.எல்ஏக்கள் அதட்டிய விவகாரம்: திமுகவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை மிரட்டிய  அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

  • Share this:
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று எஸ்.பி. வேலுமணி உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளிக்க வந்த போது, ஆட்சியர் சமீரன் அமர்ந்தபடி மனுவை வாங்கினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் உட்பட சிலர் மாவட்ட ஆட்சியரை அதட்டும் விதமாக பேசினர். ஊடகங்கள் முன்பு நடந்த அதட்டல் சம்பவம் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியானது.

Also read: 'எழுந்து நிக்க மாட்டிங்களா’: ஆட்சியரை மிரட்டிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திமுக சூலூர் ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன் தலைமையில் இன்று கோவை மாநகர காவல்  ஆணையரிடம்  திமுகவினர் மனு அளித்தனர். இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்திலும் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
Published by:Esakki Raja
First published: