கோவையில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பா.ஜ.க மோதல் வழக்கில் வானதி சீனிவாசன் உட்பட பா.ஜ.கவினர் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் அம்மன் அர்ஜூனன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரம் முடிந்து வானதி சீனிவாசன் கடைவீதி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றபோது இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
பாஜகவினர் தன்னை தாக்கியதாக கூறி அதிமுகவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஆதிநாராயணன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். தன்னை தாக்கியதாக பா.ஜ.க வை சேர்ந்த வானதி சீனிவாசன் உட்பட 7 பேர் மீது பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Also Read:தமிழகத்தில் 5 நாட்கள் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்
இந்த வழக்கு கோவை 5 வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பா.ஜ.கவை சேர்ந்த வானதி சீனிவாசன், கண்மணி பாபு, மோகனா, குணசேகரன், நாகராஜ், சண்முகசுந்தரம் மற்றும் பாபு ஆகிய 7 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, BJP, Court Case, Court released, Vanathi srinivasan