கோவை மாநகர காவல் துறையினர் அகில பாரத இந்து மகாசபை அமைப்பின் நிர்வாகி மீது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த உத்திரவினை கூடுதல் தலைமைச் செயலாளர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
அகில பாரத இந்து மகாசபை அமைப்பின் கோவை மண்டல இளைஞர் அணி அமைப்பாளராக இருப்பவர் பிரேம் என்கிற பாக்சர் பிரேம். இவர் கடந்த 2021 ம் ஆண்டு நவம்பர் மாதம், வங்கதேசத்தில் இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது மத மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்ததாகவும் கோவை பந்தயசாலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து சில தினங்களில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதே வழக்கில் மீண்டும் பாக்சர் பிரேம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட அவ்வழக்கில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான ஆவணங்களை அரசின் உயர் அதிகாரிகளுக்கு, கோவை மாநகர காவல்துறை சார்பில் அனுப்பிவைக்கப்பட்டது. காவல்துறை சார்பில் அனுப்பப்பட்ட ஆவணங்களை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வுக்கு உட்படுத்தினார்.
அப்போது கோவை மாநகர காவல்துறை சார்பில் குண்டர் சட்டமானது, 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி போடப்பட்டிருப்பதும், அந்த ஆவணங்களை 29ம் தேதி வரை, பிரேமுக்கும், அரசு உயரதிகாரிகளுக்கும் அனுப்பாமல் 12 நாட்களாக கிடப்பில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
Also read... அம்பத்தூரில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.72 லட்சம் மூன்றே நாட்களில் மீட்பு - போலீசார் துரித நடவடிக்கை...
இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதை 12 நாட்களுக்கும் மேலாக அனுப்பாமல் வைத்திருந்தால், அது காலாவதியாகிவிடும் என்ற விதியின் கீழும், குண்டர் சட்ட உத்தரவு போடப்பட்டு 3 மாதங்கள் கழித்து பிரேமை கைது செய்திருப்பதும் முறையான நடவடிக்கை அல்ல என்பதும் தெரிய வந்ததால், பிரேம் மீது கோவை காவல்துறை பதிவு செய்திருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.
மத மோதலை உருவாக்கும் வகையில் பேசியவர் மீது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தை பதிவு செய்யாமல், தாமதாக தகவல் அளித்து குண்டர் சட்டத்தக நீர்த்து போகும் வகையில் கோவை மாநகர காவல் துறை செயல்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore