கொங்கு பகுதி மக்களின் தேவைகளை மாநில அரசு நிறைவேற்றுவதை பொறுத்தே கொங்கு நாடு விவகாரத்தில் நடவடிக்கை: வானதி சீனிவாசன்

கொங்குபகுதி மக்களின் தேவைகளை மாநில அரசு நிறைவேற்றுவதை பொறுத்தே கொங்கு நாடு விவகாரத்தில் நடவடிக்கை: வானதி சீனிவாசன்

பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் செல்போன் தரவுகள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து மத்திய அரசு உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையை வெளியிடும் என்றார்.

  • Share this:
கொங்கு பகுதி மக்களின் வளர்ச்சி, தேவைகள், அபிலாஷைகள் என பல ஆண்டு ஏக்கமாக உள்ள விஷயங்களை மாநில அரசு எவ்வாறு நிறைவேற்ற போகிறது என்பதை பொறுத்தே, கொங்குநாடு விவகாரத்தில் அடுத்தகட்ட பரிசீலனைகள் இருக்கும்  என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர்  வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜகவின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பில் ஆடிட்டர் ரமேஷின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு ஆடிட்டர் ரமேஷின் உருவபடத்துக்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், ஆடிட்டர் ரமேஷ் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்கான ஆதாரங்களை பாஜகவினர் திரட்டி வருவதாகவும் தெரிவித்த அவர், இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Also read: பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்ப்பதற்கு எமர்ஜென்ஸியை மத்திய அரசு அறிவித்து விடலாம்: திருமுருகன் காந்தி ஆவேசம்

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கட்டுமான பணிகளுக்காக கோவில்கள் இடிக்கப்படுவதற்கு பதிலாக, கோவில்களை அழகுபடுத்தும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் செல்போன் தரவுகள் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து மத்திய அரசு உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையை வெளியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொங்குநாடு விவகாரத்தில் தனக்கு தனிப்பட்ட கருத்து என எதுவும் இருக்க முடியாது எனவும், கட்சியின் பொறுப்பாளராகதான் கருத்தை தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்த வானதி, தமிழ்நாட்டை தனியாக பிரிக்க வேண்டும் என பாஜக நினைக்கவில்லை என தெரிவித்தார். ஆனால் கொங்கு பகுதி மக்களின் வளர்ச்சி, தேவைகள், அபிலாஷைகள் என பல்வேறு பிரச்சனைகள் பல ஆண்டு ஏக்கமாக உள்ள நிலையில் வருங்காலத்தில் மாநில அரசு அவற்றை எவ்வாறு நிறைவேற்ற போகிறது என்பதை பொறுத்தே கொங்குநாடு குறித்து அடுத்தகட்ட பரிசீலனை வரலாம் எனவும் தெரிவித்தார்.

Also read: ஈபிஸ் - ஓபிஎஸ்-ஐ அரவணைத்து செல்ல விரும்புகிறேன்; சசிகலா

திமுக குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளம்பரம் தேடுவதாக விமர்சிப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ள கருத்து குறித்து கேட்ட போது, பாஜகவையும், பிரதமரையும் திமுகவினர் விமர்சிப்பது விளம்பரத்துக்காகவா? என வானதி சீனிவாசன் பதில் கேள்வி எழுப்பினார்.
Published by:Esakki Raja
First published: