கோவையில் ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு வளைகுடா நாடுகளில் இருந்து வித விதமான பேரிட்சம் பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் இவற்றை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் முக்கியமானது ரம்ஜான் பண்டிகை. இந்த பண்டிகையின் போது ஒரு மாதம் காலம் இஸ்லாமியர்கள் கடும் நோன்பு இருப்பது வழக்கம். சூரிய உதயத்திற்கு முன்னர் சாப்பிடும் இஸ்லாமியர்கள், மாலையில் சூரிய அஸ்தமனம் வரை தண்ணீர் குடிக்காமல் எச்சில் விழுங்காமல் நோன்பை கடைபிடிப்பார்கள். இந்த நோன்பு காலத்தில் உடலில் அதிக சத்து இருக்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர்கள் பேரிச்சம் பழங்களை விரும்பி சாப்பிடுவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது ரம்ஜான் பண்டிகைக்கான நோன்பு காலம் துவங்கி இருக்கும் நிலையில் , வளைகுடா நாடுகளில் இருந்து விதவிதமான பேரிச்சம்பழங்கள் கோவையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.கோவை உக்கடம், செல்வபுரம் உட்பட இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்அல்ஜீரிநா, ஈரான், சவுதி அரேபியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பேரிட்சம் பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
வளைகுடா பேரிட்சம் பழங்களை பரிசாக வழங்க கிப்ட் பேக்குகளாகவும் இவை பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றை இஸ்லாமியர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
ரம்ஜானை முன்னிட்டு ஆண்டு தோறும் பேரிட்சம்பழ விற்பனை மற்றும் கண்காட்சி நடத்தப்படுவதாகவும், 200 வகையான பேரிட்சம் பழங்கள் சவுதி அரேபியா , ஈரான், ஈராக்,ஓமன் உட்பட வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டு வருவதாகவும் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரு வருடங்களாக கொரோனா பாதிப்பால் பெரிய அளவில் வியாபாரம் இல்லாத நிலையில் , இந்த ஆண்டு சிறப்பான வியாபாரம் இருக்கும் என எதிர்பார்ப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.