Home /News /tamil-nadu /

கோவையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது - 42,000 இளம் வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு!

கோவையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது - 42,000 இளம் வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு!

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

  • Last Updated :
கோவை மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள் 42,266 பேர்  வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் இன்று  இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

Also read... தேசியக்கொடி, அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு!

இன்று வெளயிடப்பட்ட  இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 15,40,901 ஆண்கள், 15,91,654 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 573 ஆக மொத்தம் 31,33,128 வாக்காளர்கள் உள்ளனர்.

Also read... ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம்!

18 முதல் 19 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள் 42,266 வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Coimbatore, Voter List

அடுத்த செய்தி