மண்வளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு: 420 கி.மீ சைக்கிளில் பயணித்து கோவை வந்த குழுவினர்
மண்வளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு: 420 கி.மீ சைக்கிளில் பயணித்து கோவை வந்த குழுவினர்
’பெடல் புஸ்ஸர்ஸ்" என்ற சைக்கிள் குழுவினர்
ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு மண்வளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நாடுகளில் இரு சக்கர வாகனம் மூலம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.
மண்வளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ’பெடல் புஸ்ஸர்ஸ்" என்ற சைக்கிள் குழுவினர் 420 கி.மீ சைக்கிளில் பெங்களுரில் இருந்து பயணித்து கோவை வந்தடைந்தனர்.
ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு மண்வளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நாடுகளில் இரு சக்கர வாகனம் மூலம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.
Save soil என்ற பெயரில் சத்குரு மேற்கொண்டு வரும் பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மண் வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ’பெடல் புஸ்ஸர்ஸ்" என்ற சைக்கிள் பயணம் மேற்கொள்ளும்27 பேர் கொண்ட தன்னார்வலர் குரிவினர் பெங்களூருவில் இருந்து சுமார் 420 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து இன்று கோவை வந்தடைந்தனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் மண் வளம் குறைந்து வரும் நிலையில் , மண் வளத்தை பாதுகாக்க உரிய சட்டங்களை இயற்ற வேண்டும் என வலியுறுத்தி ஜக்கிவாசுதேவ் மேற்கொள்ளும் இருசக்கர வாகன பயணத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் சைக்கிள் பயணம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.
ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு வழியாகவிசுவல்கு வந்துள்ள இந்த குழுவினர் இன்று மாலை ஈஷா மையத்தில் தங்கள் பயணத்தை நிறைவு செய்கின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.