Home /News /tamil-nadu /

கோவில் திருவிழாக்களில் மேடை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க நூதன முறையில் கோரிக்கை

கோவில் திருவிழாக்களில் மேடை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க நூதன முறையில் கோரிக்கை

அண்ணா மற்றும் கலைஞர் கருணாநதி வேடமணிந்து மேடை நடன கலைஞர்கள்

அண்ணா மற்றும் கலைஞர் கருணாநதி வேடமணிந்து மேடை நடன கலைஞர்கள்

Coimbatore | மேடை நடன கலைஞர் சங்கத்தினர் பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் வேடம் அணிந்து வந்தனர்.

  • News18
  • Last Updated :
கோவை மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களில் மேடை நடன நிகழ்ச்சிகள் நடத்த  அனுமதி வழங்க வேண்டும் என அண்ணா மற்றும் கலைஞர் கருணாநதி வேடமணிந்து மேடை நடன கலைஞர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மேடை நடன கலைஞர் சங்கத்தினர் பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் வேடம் அணிந்து வந்தனர்.

கோவையில்  பல்வேறு இடங்களில் மேடை நடன நிகழ்ச்சிகள் நடத்த காவல் துறை  அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் , இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளத்தனர். பின்னர் பேசிய அவர்கள்  மேடை நடன கலைஞர்கள் மாநிலம் முழுவதும் 8,000 மேற்பட்டோர் இருப்பதாகவும், மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகுந்த வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இருப்பதாகவும், தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட நிலையிலும் மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை எனவும் தெரிவித்தனர்.

Also read... ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை - உயர் நீதிமன்றம்

பிற மாவட்டங்களில் அனுமதி அளக்கப்பட்டு வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் மட்டும் அனுமதி வழங்கப்படுவதில்லை  எனவும் எனவே கோவை மாநகர காவல் ஆணையர் கோவையில்  கோவில் திருவிழாக்களிலும், மேடைகளிலும் தங்களுடைய  நடன நிகழ்ச்சிகள்  நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Coimbatore, Stage show

அடுத்த செய்தி