முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பெண் காவலரின் ஆபாச புகைபடங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டிய ஆண் காவலர் கைது!

பெண் காவலரின் ஆபாச புகைபடங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டிய ஆண் காவலர் கைது!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பெண் காவலரின் கணவருக்கும் புகைபடங்களை அனுப்பி  காவலர் ஏழனைபாண்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த பெண் காவலர், கோவை மாவட்ட சைபர் கிரைமில் புகார் அளித்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :

கோவையில் பெண் காவலரின் ஆபாச புகைபடங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டிய ஆண் காவலரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் காவலராக  பணிபுரித்து வருபவர்  ஏழனை பாண்டி. இவர் கடந்த 2018ம் ஆண்டு கோவையில் பணிபுரியும் போது திருமணமான பெண் காவலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறிது நாட்களில்  காவலருடன் இருந்த தொடர்பை பெண்  காவலர் துண்டித்து கொண்ட நிலையில், காவலர் ஏழனை பாண்டி தனது சொந்த மாவட்டமான திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரி காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் காவலர் ஏழனைபாண்டி மீண்டும் பெண் காவலருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்ற நிலையில், பெண் காவலர் ஏழனை பாண்டியை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த அவர், பெண் காவலருடன்  தனிமையில் இருந்த புகைபடங்களை சமூக வலைதளத்தில் பதிவிட போவதாக பெண் காவலரை மிரட்டியுள்ளார்.

Also read... கோவையில் நம் கூட்டத்தை பார்த்து கோட்டையே நடுங்க வேண்டும் - எஸ்.பி.வேலுமணி 

மேலும் பெண்  காவலரின் கணவருக்கும் புகைபடங்களை அனுப்பி  காவலர் ஏழனைபாண்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த பெண் காவலர், கோவை மாவட்ட சைபர் கிரைமில்  புகார் அளித்தார்.

அந்த  புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சைபர் கிரைம்  போலீசார் நாங்குநேரியில் இருந்த காவலர் ஏழனைபாண்டியை கைது செய்து கோவை அழைத்து வந்து நீதிபதி இல்லத்தில் ஆஜர் படுத்தி மத்திய் சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News