Home /News /tamil-nadu /

கோவையில் பாலியல் புகாருக்கு உள்ளான அரசு பள்ளி ஆசிரியர் கைது!

கோவையில் பாலியல் புகாருக்கு உள்ளான அரசு பள்ளி ஆசிரியர் கைது!

ஆசிரியர் விஜய் ஆனந்த்

ஆசிரியர் விஜய் ஆனந்த்

ஆன்லைன் வகுப்பிற்கு மேல் சட்டை இல்லாமல் வருவதாகவும், அவ்வப்போது வாட்ஸ் அப்பில் தவறாக குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
கோவையில் பாலியல் புகாருக்கு உள்ளான அரசு பள்ளி ஆசிரியர் விஜய் ஆனந்தை  இன்று காலை அனைத்து மகளிர் காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

கோவை வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்  பணியாற்றி வரும் கணினி அறிவியல் ஆசிரியர் விஜய் ஆனந்த் மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவதாக கூறி மாணவ, மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியரின் அத்துமீறல்கள் குறித்து மாணவிகள் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் புகார் அளித்தும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் கீதா மாணவிகளிடம்  விசாரணை நடத்தினார். பின்னர்  விஜய்ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து உத்திரவிட்டார். இந்நிலையில் மாணவிகள் 2 பேர் ஆசிரியர் விஜய் ஆனந்தின் அத்துமீறல் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Also read... மீண்டும் விஜயகாந்த் திரைப்படங்களில் நடிக்க போகிறாரா? பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!

ஆன்லைன் வகுப்பிற்கு மேல் சட்டை இல்லாமல் வருவதாகவும், அவ்வப்போது வாட்ஸ் அப்பில் தவறாக குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தனர்.

Also read... நீலகிரி கோவிலில் பூசாரியாக உள்ள சிறுவனுக்கு தடையில்லாத கல்வி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்!

இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்த கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர், போத்தனூர் பகுதியில்  வீட்டிலிருந்த ஆசிரியர் விஜய் ஆனந்தை கைது செய்தனர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் விஜய் ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Sexual abuse

அடுத்த செய்தி