கோவையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் அகஸ்டின் பிரபு என்பவர் திரைப்பட தயாரிப்பிற்காக 1.25 கோடி ரூபாய் வரை பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட நபர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் அனிதா தம்பதியினர். இவர்கள் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் "சதுர்" திரைப்பட இயக்குனர் அகஸ்டின் பிரபு என்பவர் மீது மோசடி புகார் அளித்தனர். பின்னர் பேட்டியளித்த சக்திவேல், ’அகஸ்டின் பிரபு என்பவர் தனது குடும்ப நண்பர்கள் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகமானதாகவும், ஷெரில் மீடியா என்ற பெயரில் குறும்படம் மற்றும் திரைப்படம் தயாரிக்கும் கம்பெனியை வைத்துள்ளதாக கூறிய அவர் திரைப்படம் எடுக்க பணம் கேட்டதால் தங்களிடம் இருந்த பணத்தையும், நண்பர்களிடம் இருந்து வாங்கிய பணம், கிரெடிட் கார்டில் இருந்து எடுக்கப்பட்ட பணம் என 1.25 கோடி ரூபாய் வரை கொடுத்தேன்.
ஆனால் இப்போது வரை பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. கடந்த ஒரு வருடமாக அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார். படம் வெளியானதும் பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன் என்று கூறிய அவர் இப்போது ஏமாற்றி விட்டதாகவும் கூறிய சக்திவேல் தங்களுடைய பணத்தை பெற்று கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
ஜெயலலிதாவின் 6 அடி மெழுகு சிலை முன் அதிமுக நிர்வாகிகள் எடுத்த சபதம்
இதனிடையே வரும் 27 ம் தேதி அகஸ்டின் பிரபு இயக்கிய படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்வு நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்த அவர், அவர் படம் வெளியாவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை பணம் வந்தால் போதும் எனவும் தெரிவித்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார். பணம் கொடுத்ததற்கான அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகளிடம் கொடுத்து இருப்பதாகவும் புகார் அளித்த சக்திவேல் அனிதா தம்பதி தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.