பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கேம் விளையாட தந்தை செல்போன் தர மறுத்ததால் 6ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு கண்ணப்பன் நகர் பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி, இவருக்கு கிட்டாண் அம்மாள் என்ற மனைவியும், முத்துமாரி, வேப்பிலைக்காரி, ஏசம்மா என்ற மூன்று மகள்களும், ஈஸ்வரன், அர்ஜுனன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் பழனிசாமியின் கடைசி மகனான அர்ஜுனன் சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வழக்கம் போல் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்த அர்ஜுனன் தந்தையிடம் கேம் விளையாட செல்போன் கேட்டுள்ளார்.
தந்தை பழனிசாமி செல்போன் தர மறுத்ததால் திடீரென வீட்டுக்குள் சென்று அர்ஜுனன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மாணவனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தற்கொலை குறித்து கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
-செய்தியாளர்: சக்திவேல்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.