ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோவையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை... : குனியமுத்தூர் போலீசார் விசாரணை

கோவையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை... : குனியமுத்தூர் போலீசார் விசாரணை

செல்வராஜ்

செல்வராஜ்

கோவை தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காம் அணியில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் செல்வராஜ் தற்கொலை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கோவை  தமிழ்நாடு சிறப்பு காவல் படை  நான்காம் அணி ஆய்வாளர் செல்வராஜ் தனது அறையில்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது  குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காம் அணியில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி,மகன்கள் சென்னையில் குடியிருந்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் முகாமில் இருந்த செல்வராஜ் நேற்று பிற்பகல் கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை வளாகத்தில் உள்ள தனது அறைக்கு வந்துள்ளார். அறையில் உள்ள  மின்விசிறியில், லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Also read... பட்டினியால் சிறுவன் இறந்த செய்தியில் திருப்பம்... சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி

இந்நிலையில் அவரது அறைக்கு சென்ற காவலர்கள் , செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடலை மீட்ட சக காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also read... 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் சுணக்கம்

மேலும் காவல் ஆய்வாளர்  தற்கொலைக்கான காரணம் குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குடும்ப பிரச்சனை காரணமாக செல்வராஜ் தற்கொலை செய்துகொண்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

-----------------------------------------------------------------------------------------------

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Coimbatore, Commit suicide, Police