பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதி முத்துமுடி எஸ்டேட் பகுதியில் வனப்பகுதிக்குள் இருந்து திடீரென 40.க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தன. யானைகள் கூட்டம் கூட்டமாக தேயிலை தோட்டத்திற்குள் வருவதைப் பார்த்த தோட்ட தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.இதனால் அப்பகுதியில் தேயிலை பறிக்கும் தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த வனத் துறையினர் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
Also Read: கொடைக்கானலை அச்சுறுத்தும் மேஜிக் மஷ்ரூம்.. சுற்றுலா பயணிகளை குறிவைக்கும் போதை கும்பல்
வால்பாறையில் முதல்முறையாக 40-க்கும் மேற்பட்ட யானைகள் ஒரே இடத்தில் முகாமிட்டு உள்ளதால் தேவையின்றி அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.மேலும் இந்தப் பகுதியில் இருந்து யானைகள் அடுத்த பகுதிக்கு செல்லும்போது குடியிருப்பு பகுதிகள் நுழையாதவாறு வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் உடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாலை வேளையில் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் முன்புறம் விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.40க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
செய்தியாளர் - ம.சக்திவேல் (பொள்ளாச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Elephant, Elephant routes, Pollachi, Tamil News, Valparai Constituency, Wilf animal Elephant