பொள்ளாச்சியில் நள்ளிரவில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் உயர் அழுத்த மின்கம்பங்கள் சாய்ந்ததில் 3 வீடுகள் சேதமடைந்தன.
பொள்ளாச்சி கோவை சாலை சிடிசி மேடு பகுதியில் அமைந்துள்ளது அண்ணா காலனி. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்புகளுக்கு அருகில் புதிய பள்ளி கட்டிடம் ஒன்று உருவாகி வருகிறது. அதன் பணிக்காக அங்கு தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு தகர கொட்டகை உடன் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசிய நிலையில், தகரக் கெட்டகை பறந்து உயர் அழுத்த மின்கம்பத்தின் மீது விழுந்தது.
இதில் அங்கிருந்த மின்கம்பம் குடியிருப்புகள் மீது சாய்ந்தது. அதில் 3 குடியிருப்புகள் சேதமடைந்தன. இரவு மின்வெட்டு ஏற்பட்டு இருந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
-செய்தியாளர்: சக்திவேல்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.