Home /News /tamil-nadu /

கோவை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 யானைகள் உயிரிழப்பு!

கோவை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 யானைகள் உயிரிழப்பு!

கோவையில் ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கோவை நவக்கரை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பெண் யானைகள் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகளும், வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் நவக்கரையை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று இரவு 9.05 மணி அளவில் சுமார் 25  வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானையும் 12 முதல் 15 வயது மதிக்கதக்க இரு பெண்யானை என மூன்று பெண் யானைகள் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றது.

அப்போது, அந்த தண்டாவளத்தின் வழியாக வந்த மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் மீது மோதியது. இதில் 3 பெண் யானைகளும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

யானைகள் மீது ரயில் மோதிய சம்பவம் குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினரும், ரயில்வே ஊழியர்களும் விரைந்து வந்தனர்.

யானையின் மீது மோதிய ரயில் அங்கிருந்து தாமதமாக கிளம்பி சென்றது. ஓரே நேரத்தில் ரயில் மோதி 3 பெண் காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில் இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தேவையான நடவடிக்கைகளையும் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே யானைகள் உயிரிழந்த இடத்தில் யானைகளின் உடல்கள் அருகே கற்பூரம் ஏற்றி வைத்து அவற்றின் ஆன்மா சாந்தியடைய கிராம மக்கள் வழிபாடும் செய்தனர்.

ஏற்கனவே வாளையார், மதுக்கரை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம்  இருப்பதால் இங்கு ரயில்களை குறைவான வேகத்தில் இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. ஆனால் வனத்தையொட்டிய இந்த பகுதிகளில் ரயில் வேகமாக சென்றதே யானைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என கூறப்படுகின்றது.

இதே போல பல முறை காட்டுயானைகள் தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் அடிக்கடி  உயிரிழந்த நிலையில்,  யானைகள் உயிரிழப்பு நடைபெறாமல் இருக்க ரயில்வே நிர்வாகமும், வனத்துறையும் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். எனினும், யானைகள் உயிரிழப்பு தற்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
Published by:Esakki Raja
First published:

Tags: Coimbatore, Elephant

அடுத்த செய்தி