• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • போலி மருந்து சீட்டு மூலம் மருந்தகத்தில் போதை மாத்திரைகள் வாங்க முயன்று சிக்கிய நபர்கள்..

போலி மருந்து சீட்டு மூலம் மருந்தகத்தில் போதை மாத்திரைகள் வாங்க முயன்று சிக்கிய நபர்கள்..

போலி மருந்து சீட்டு மூலம் மருந்தகத்தில் போதை மாத்திரைகள் வாங்க முயன்ற இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Share this:
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த விஜயரங்கன்,  ஒப்பணக்கார வீதி பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மருந்து கடைக்கு நேற்று வந்த முகமது ரசூல் மற்றும் சக்திவேல் என்ற இரு இளைஞர்கள் தனியார் மருத்துவமனையின் மருந்து சீட்டை கொடுத்து மாத்திரைகள் கேட்டுள்ளனர். அதில் குறிப்பிட்டுள்ள மாத்திரைகள் போதை தன்மை கொண்டது என்பதால் சந்தேகமடைந்த மருந்துகடை உரிமையாளர் விஜயரங்கன், தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் குறிப்பிட்ட பெயரில் மருந்து சீட்டு எதுவும் கொடுக்க வில்லை என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விஜயரங்கன் அவர்களிடம் பெயர் மற்றும் முகவரிகளை கேட்ட போது, அவர்கள் விவரங்களை கூற மறுத்த நிலையில், மருந்து சீட்டு போலியானது என்பது தெரியவந்தது. போலியாக மருந்து சீட்டினை தயார் செய்து இருப்பது குறித்து மருந்து கடை உரிமையாளர் விஜயரங்கன் கேட்ட போது, விஜயரங்கனுக்கு  இளைஞர்கள் இருவரும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க... முசிறியில் பெண் தலைமை காவலர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

இது குறித்து மருந்துகடை உரிமையாளர் பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் 4 பிரிவுகளில் இளைஞர்கள் சக்திவேல், முகமது ரசூல் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து  இருவரையும் சிறையில் அடைத்தனர்.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க...கல்லூரி சேர்க்கையில் வன்னியர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்

ஏற்கனவே கோவையில்  போதை மாத்திரை தொடர்பாக  17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இந்நிலையில் மேலும் இருவர் கைதாகிய நிலையில் இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

சக்திவேல் கோவை நகரில் பல்வேறு போதை ஊசி போடும் நபர்களுக்கு பிரபல மருத்துவமனைகளின் பெயரில் போலியான மருந்து சீட்டு தயாரித்து கொடுத்து வந்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கைதாகியுள்ள சக்திவேலை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் நிலையில் போதை ஊசி கடத்தல் கும்பல் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: