முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோவையில் கட்டு கட்டாக சிக்கிய ரூ1.80 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்... 2 பேர் கைது

கோவையில் கட்டு கட்டாக சிக்கிய ரூ1.80 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்... 2 பேர் கைது

கள்ளநோட்டுகள் தயாரித்த 2 பேர்

கள்ளநோட்டுகள் தயாரித்த 2 பேர்

கோவை மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இரண்டு பேரை கேரள போலீசார் கோவை உக்கடத்தில் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2000 ரூபாய் கள்ளநோட்டு் 90  கட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உதயம் பேரூர் காவல்நிலையத்தில் கடந்தமாதம் 28ம் தேதி  பிரியன்லால் என்பவர் 95,000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் கொச்சி போலீசார் மேற்கொண்ட விசாரணையில்  கோவையில் கட்டு கட்டாக கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நபர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொச்சி போலீசார், கோவை போலீசாரின் உதவியுடன் உக்கடம் அல் அமீன் காலனியில் உள்ள அஸ்ரப் என்பவரது வீட்டில் சோதனையிட்டனர்.

சோதனையின் போது அவரிடமிருந்து 8000 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அஸ்ரப் கொடுத்த தகவலின்படி கரும்புகடை பகுதியை சேர்ந்த சைய்யது சுல்தான் என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் கட்டிலுக்கு அடியில்  1.80 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக ஒளித்து வைத்து இருப்பது தெரியவந்தது. 2000 ரூபாய் நோட்டுகள் 90 கட்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்த இரு மாநில போலீசார் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள்

மேலும் சைய்யது சுல்த்தான், அஸ்ரப்  ஆகிய  இருவரையும் கொச்சியில் இருந்து வந்த கேரள போலீசார் கைது செய்தனர்.  பின் கைது செய்யப்பட்ட இருவரையும் கோவை குனியமுத்தூர் காவல் நிலையம் கொண்டு சென்று முதல் கட்ட விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருப்பதும், கேரளாவை தலைமையிடமாக கொண்டு கள்ள நோட்டு கும்பல் செயல்பட்டு வந்து இருப்பதும் தெரியவந்தது. கோவை கரும்புகடை, அல் அமீன் காலனி பகுதிகளிலும் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டு இருப்பதும் தெரியவந்தது.

மேலும் படிக்க... அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.. இல்லையெனில் விவேக் ஆன்மா ஏற்றுக் கொள்ளாது.. புதுச்சேரியில் தமிழிசை வேண்டுகோள்

விசாரணைக்குப் பின்னர் கைதான இருவரையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தையும் எடுத்துக்கொண்டு மேல்  விசாரணைக்காக அவர்களை கொச்சி அழைத்து சென்றனர். இது தொடர்பாக கோவை போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Coimbatore, Crime | குற்றச் செய்திகள், Fake Note