Home /News /tamil-nadu /

ஓரினசேர்க்கையாளரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டல் - கோவையில் 2 கல்லூரி மாணவர்கள் கைது

ஓரினசேர்க்கையாளரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டல் - கோவையில் 2 கல்லூரி மாணவர்கள் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஓரினச்சேர்க்கைக்கு விரும்புபவர்களை வரவழைத்து அவர்களை தாக்கி பணம் மற்றும் செல்போன் பறிப்பதை வாடிக்கையாக வைத்து வருவதும், கடந்த மாதம் ஆந்திராவை சேர்ந்த நபர் ஒருவரிடம் பணம் செல்போன் பறித்து இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
கோவையில் ஓரினசேர்க்கையாளர்களுக்கான ஆன்லைன் செயலி மூலம் தொடர்பு கொண்டு  ஓரினசேர்க்கையாளரை வரவழைத்து அவரை நிர்வாணபடுத்தி வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் உட்பட இருவரை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை கணபதி  தாரணி நகர் பகுதியை  சேர்ந்த ஒருவர் காந்திபுரத்தில் டாஸ்மாக் பாரில் சமையலராக வேலை பார்த்து வருகிறார். ஓரினச்சேர்க்கையாளரான இவர்  ஆன்லைன்  செயலி குழுவில்  உறுப்பினராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்காதரனை செயலி மூலம் தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர், சாய்பாபா காலனி ரயில்வே தண்டவாள பகுதிக்கு வரும்படி பேசியுள்ளார். இதனையடுத்து கங்காதரன் அந்த வாலிபர் அழைத்த இடத்துக்கு சென்ற போது  அங்கிருத்த  3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி  ஆடைகளை கழற்றினர். பின்னர் அவர்கள் தங்களது செல்போனில் அந்த நபரை நிர்வாணமாக வீடியோ எடுத்துக்கொண்டு, சமூக வலைத் தளங்களில் இந்த வீடியோவை  பதிவிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.

மேலும் அவரிடம்  இருந்த  செல்போனையும்  பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ,  நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டியது சிவானந்தா காலனி காந்தி நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பிரசாந்த் மற்றும அவரது நண்பர்கள் நிஷாந்த்(21) மற்றும் மாணிக்கம் (20) என்பது தெரியவந்தது.

3  பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில்  கல்லூரி மாணவர்கள் பிரசாந்த் மற்றும் நிசாந்தை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு கல்லூரி மாணவர்  மாணிக்கத்தை போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் மூவரும் ஆன்லைன் செயலியை பயன்படுத்தி, ஓரினச்சேர்க்கைக்கு விரும்புபவர்களை வரவழைத்து அவர்களை தாக்கி பணம் மற்றும் செல்போன் பறிப்பதை வாடிக்கையாக வைத்து வருவதும், கடந்த மாதம் ஆந்திராவை சேர்ந்த நபர் ஒருவரிடம் பணம் செல்போன் பறித்து இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ALSO READ |  சொத்துவரி உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் - அமைச்சர் சேகர் பாபு
 இதுவரை 17 பேரிடம் இதுபோன்று பணம்,நகை, செல்போன் போன்றவற்றை பறித்து இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரினசேர்க்கையாளர்களை குறி வைத்து  கல்லூரி மாணவர்கள் நூதன வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது போலீசாரிடம் சிக்கி  இருப்பது குறிப்பிடத்தக்கது.இதில் தலைமறைவான மாணிக்கம் என்ற மாணவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் 3 பேர் மீதும் கொலை மிரட்டல், இயற்கைக்கு மாறான குற்றங்களில் ஈடுபடுதல், காயம் ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Coimbatore

அடுத்த செய்தி