Home /News /tamil-nadu /

மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம்.. சிக்கிய 17 வயது பள்ளி மாணவி - அதிர வைத்த வாக்குமூலம்

மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம்.. சிக்கிய 17 வயது பள்ளி மாணவி - அதிர வைத்த வாக்குமூலம்

பள்ளி மாணவி கைது

பள்ளி மாணவி கைது

Crime News | மூதாட்டியை கொலை செய்து கம்மல் மற்றும் கழுத்தில் இருந்த 20 சவரவன் நகையை திருடிச் சென்ற சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்

    பொள்ளாச்சியில் 17 வயது பள்ளி சிறுமி 72 வயது மூதாட்டியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பொள்ளாச்சி மாரியப்பன் வீதியை சேர்ந்தவர் நாகலட்சுமி வயது 72. இவருக்கு செந்தில்வேல் என்ற மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது இவர் மகன் செந்தில்வேல் மற்றும் பேரனுடன் மாரியப்பன் வீதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை செந்தில் வேல் வழக்கம்போல வேலைக்கு  சென்றுள்ளார். அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் மூதாட்டியின் அலறல் சத்தம்கேட்டு வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து செந்தில்வேலுக்கு தகவல் கொடுத்தனர்.

    வீட்டுக்கு வந்து செந்தில் வேல் பார்த்த போது தாயின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு காதில் இருந்த கம்மல் மற்றும் கழுத்தில் இருந்த 20 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.‌ பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த மேற்கு காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கொலை சம்பவம் குறித்து  விசாரணை நடத்தியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்களை விசாரித்ததில் அதில் ஒரு 17 வயது பள்ளி சிறுமியின் நடமாட்டமும் பதிவாகி இருந்துள்ளது .

    ALSO READ |  ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் அட்டூழியம்.. போலீசிடம் தகவல் கூறிய முதியவர் கொலை - நெல்லையில் பரபரப்பு
     சிறுமியை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதை கண்டு காவல்துறையினர் சிறுமியிடம் மேலும் விசாரணை செய்ததில் நகைக்காக ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்ததை சிறுமி ஒப்புக்கொண்டார். பின்னர் மேற்கு காவல் நிலைய போலீசார் சிறுமியை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு சிறுமியை சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நகைக்காக ஆசைப்பட்டு மூதாட்டியை கழுத்தை நெரித்து சிறுமி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    செய்தியாளர் : ம.சக்திவேல்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி