டெல்லியில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு 1.15 கோடி மதிப்பு போதை பொருள் கடத்தல்...நைஜீரிய வாலிபர் ஒருவர் கைது...

நைஜிரிய நாட்டு இளைரை கைது செய்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர்..

கோவை ரயில் நிலையத்தில் டெல்லியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.15 கோடி மதிப்புடைய Methamphetamine போதை பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து நைஜீரிய வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.

  • Share this:
டெல்லியில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மதுரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கோவை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் இணைந்து ரயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பனியன் பொருட்களுடன் வந்த  நைஜீரிய இளைஞர்கள் இருவரை சோதனையிட்ட போது அதில்  Methamphetamine என்ற போதை பொருள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டறிந்தனர். கைப்பற்றப்பட்ட  Methamphetamine போதை பொருள் 2.3 கிலோ எடையில் இருந்தாகவும் இதன் மதிப்பு  1.15 கோடி ரூபாய் என்பதும் தெரியவந்தது. அதன் பின்னர் போதை பொருளை பனியன் பொருட்களுடன் வைத்து கோவை கடத்திவந்த நைஜீரியாவை சேர்ந்த எக்வின் கிங்ஸ்லி என்பவரை ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள்


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... கடலூரில் சமூக இடைவெளி இல்லாமல் சந்தையில் திரண்ட மக்கள் .. தொற்று பரவும் அபயாம்..

அப்போது அவர் திருப்பூரில் தங்கியிருந்து பனியன் பொருட்கள் ஏற்றுமதி செய்து வருவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து  அவரை கைது செய்த மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அவரை  மதுரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர். எக்வின் கிங்ஸ்லியுடன் வந்த மற்றொரு நபர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே அவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடதக்கது.
Published by:Vaijayanthi S
First published: