Home /News /tamil-nadu /

பொதுக்கூட்டத்தில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

பொதுக்கூட்டத்தில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

ஸ்ரீதர்

ஸ்ரீதர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை தரக்குறைவாக பேசியதற்காக அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் தலைவர் ஸ்ரீதர் மீது பொள்ளாச்சி போலீசார் கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
சென்னை நங்கநல்லூரில் ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் குறித்து அகில பாரத அனுமன் சேனா என்கிற அமைப்பின் தலைவர் ஸ்ரீதர் அவதூறாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

அந்த வீடியோவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல்வேறு அரசியல்  கட்சி தலைவர்களையும், மாவோ, ஏங்கல்ஸ், லெனின் போன்ற கம்யூனிச தலைவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக அவர் பேசியிருந்தார்.



குறிப்பாக, திருமாவளவன் பற்றி இழிவுபடுத்தும் விதமாக ஸ்ரீதர் பேசியது சர்ச்சைக்குள்ளானது. அதன் காணொளிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், வி.சி.க கோவை தெற்கு மாவட்ட தலைவர் பிரபு பொள்ளாச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், பொள்ளாச்சி போலீசார் ஸ்ரீதர் மீது கொலை மிரட்டல், அவமதித்தல், ஆபாசமாகப் பேசுதல், கலகம் செய்தல் உட்பட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
Published by:Rizwan
First published:

Tags: Dmk leader mk stalin, Minister Jayakumar, Thol. Thirumavalavan

அடுத்த செய்தி