முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வேல் யாத்திரை தடை : கண்டனம் தெரிவிக்க அரோகரா கோஷமிட்டு, 10 அடி உயர வேலுடன் பஜனை பாடல்களை பாடிய பாஜகவினர்..

வேல் யாத்திரை தடை : கண்டனம் தெரிவிக்க அரோகரா கோஷமிட்டு, 10 அடி உயர வேலுடன் பஜனை பாடல்களை பாடிய பாஜகவினர்..

வேலுடன்  பஜனை பாடல்கள் பாடி எதிர்ப்பு

வேலுடன்  பஜனை பாடல்கள் பாடி எதிர்ப்பு

பா.ஜ.க மாநில  பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் மாவட்ட தலைவர் நந்தகுமார் ஆகியோரும் இந்த பஜனை பாடல் பாடும் நிகழ்வில் கலந்து கொண்டு பாடல்கள்  பாடினர்.

  • 1-MIN READ
  • Last Updated :

வெற்றிவேல் யாத்திரைக்கு  அனுமதி மறுக்கப்பட்டதை  கண்டித்து கோவையில் பா.ஜ.கவினர்  பிரமாண்ட வேலுடன்  பஜனை பாடல்கள் பாடி எதிர்ப்பை தெரிவித்தனர்.

பா.ஜ.க சார்பில் நடத்தப்படும் வெற்றிவேல் யாத்திரைக்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ள  நிலையில் தமிழகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக  கோவை சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக  அலுவலகம்  முன்பாக  இன்று 300-க்கும்  மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டனர். பா.ஜ.க அலுவலகம் முன்பாக அரோகரா  முழுக்கம்  எழுப்பிய  அவர்கள், முருகன் பஜனை பாடல்களை பாடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Also read... Gold Rate | அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

பா.ஜ.க மாநில  பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் மாவட்ட தலைவர் நந்தகுமார் ஆகியோரும் இந்த பஜனை பாடல் பாடும் நிகழ்வில் கலந்து கொண்டு பாடல்கள்  பாடினர்.

பா.ஜ.க தலைமையில் இருந்து உரிய அறிவிப்பு வந்தவுடன் போராட்டம்  நடத்தப்படும் எனவும்  அதுவரை தொடர்ந்து பஜனை பாடல்களை பாடி , வெற்றிவேல்  யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு  எதிர்ப்பை தெரிவிக்க இருப்பதாகவும் பா.ஐ.க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் 10 அடி உயர  வேலுடன் பா.ஜ.க தொண்டர்கள் பஜனை பாடல்களை பாடினர்.

First published:

Tags: Coimbatore, Vel Yatra