கோவையில் சாயம் பூசப்பட்ட போலி நாட்டுக்கோழி முட்டைகள் பறிமுதல்..!

கோவையில் சாயம் பூசப்பட்ட போலி நாட்டுக்கோழி முட்டைகள் பறிமுதல்..!
முட்டை
  • News18
  • Last Updated: February 3, 2020, 1:40 PM IST
  • Share this:
கோவையில் நாட்டுகோழி முட்டை என்று விற்பனை செய்து வந்த சாயம் பூசப்பட்ட போலி முட்டைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

கோவை மீன் மார்க்கெட் மற்றும் காய்கறி மாற்கெட்டுகளில் பண்ணைக் கோழிமுட்டைகளை சாயமேற்றி கோழி முட்டைகள் என்று விற்பனை செய்வதாக தவகல் கிடைத்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உக்கடன் மீன் மார்க்கெட், லாரிபேட்டை மீன் மார்க்கெட், சிங்காநல்லூர் உழவர் சந்தை , ஆர்.எஸ் புரம் உழவர் சந்தை, வடவள்ளி உழவர் சந்தை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட், அண்ணா மார்க்கெட் ஆகிய பகுதிகளில் நேற்று காலை 6 மணி முதல் இந்த ஆய்வு திடீரென மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இது குறித்து டாக்டர் தமிழ்ச்செல்வன்பேசிய போது “ சேலத்திலிருந்து குழுக்களாக கோவை வரும் இவர்கள் ஒரு நாளைக்கு 500 முட்டைகளை ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் விற்பனை செய்கின்றனர். நாங்கள் ஆய்வு செய்ததில் 10 பேரிடமிருந்து 3,900 சாயம் பூசப்பட்ட முட்டைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இனிமேல் இதுபோன்ற முட்டைகளை விற்பனை செய்யக் கூடாது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுபோல் நிறமேற்றப்பட்ட காபி தூள் , டீ தூளும் விற்பனை செய்யப்படுகின்றன.

இப்படி சாயமேற்றப்பட்ட, நிறமேற்றப்பட்ட முட்டை, டீ தூள், காபி தூள், சில்லி சிக்கன் , காலிபிளவர், காணான் சில்லி போன்ற உணவுப் பொருட்களை கண்டாலோ அல்லது தரம் குறைந்த உணவுப் பொருட்கள், அரசாங்கம் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உணவுப் பொருட்களின் விற்பனை, சேமித்து வைத்திருந்தாலோ உணவுப் பாதுகாப்புத் துறையின் 9444042322 என்ற இந்த எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம். புகார் பெறப்பட்ட 48 மணி நேரத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் பெயர் , விவரங்கள் ரகசியம் காக்கப்படும் “ இவ்வாறு பேசினார்.
 

 
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்