வாக்கு இயந்திரம் உள்ள அறையில் சிசிடிவி இயங்கவில்லை: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

சிசிடிவி

அரசியல் கட்சியினர் அளித்த புகாரின்பேரில், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராசாமணி அங்கு ஆய்வு நடத்தினார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இயங்காததால், அங்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

  தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், சீலிடப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளன. அறையைச் சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு மட்டுமின்றி, 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய வகையில் சிசிடிவி கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

  இந்த நிலையில், கோவை தடாகம் சாலையில் உள்ள கல்லூரி ஒன்றில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமிராக்கள் இயங்கவில்லை.

  இது தொடர்பாக அரசியல் கட்சியினர் அளித்த புகாரின்பேரில், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராசாமணி அங்கு ஆய்வு நடத்தினார்.

  முதலில் நேற்றிரவு பெய்த மழையால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அதனை ஆட்சியர் மறுத்துள்ளார்.

  6 அறைகளில் பொருத்தப்பட்ட 144 கேமிராக்களில் ஒருசில கேமிராக்கள் மட்டுமே இயங்குவதாக கூறப்படுகிறது. இதையடுத்து. சிசிடிவி கேமிராக்களை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: