கோவையில் பியூட்டி பார்லரில் பெண் தூக்கிட்டு தற்கொலை

மருத்துவமனைக்கு சென்ற ஷோபனாவின் உறவினர்கள் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Web Desk | news18
Updated: July 18, 2019, 9:41 PM IST
கோவையில் பியூட்டி பார்லரில் பெண் தூக்கிட்டு தற்கொலை
மறியலில் ஈடுபட்ட ஷோபனாவின் உறவினர்கள்
Web Desk | news18
Updated: July 18, 2019, 9:41 PM IST
கோவையில் பியூட்டி பார்லரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த பத்மநாபன் என்பவரின் மகள் ஷோபனா. பிசிஏ பட்டதாரியான இவர், கடந்த இரண்டு மாதங்களாக பாப்பம்பட்டி பிரிவில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தார்.

ஷோபனாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரை வந்து கூட்டிச் செல்லுமாறும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வந்த தகவலையடுத்து அங்கு பெற்றோர்கள் சென்ற போது, ஷோபனா சடலமாக தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் கிடைத்த போலீசார் ஷோபனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்ற ஷோபனாவின் உறவினர்கள் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு சென்ற போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினர். ஆனால் ஷோபனாவின் உறவினர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அவர்களை குண்டுகட்டாக போலீசார் அப்புறப்படுத்தினர்.

இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

Also see...

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...