கொரோனாவால் வியாபாரம் பாதிப்பு: வாழைத் தோட்டங்களை தீ வைத்து எரிக்கும் தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள்

கொரோனாவால் வியாபாரம் பாதிப்பு: வாழைத் தோட்டங்களை தீ வைத்து எரிக்கும் தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள்
வாழைத் தோட்டங்களை தீ வைத்து எரிக்கும் தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள்!
  • Share this:
கோவை மாவட்டத்தில்  ஊரடங்கு காரணமாக வாழை இலையின்  தேவை குறைந்து போனதால், தொண்டாமுத்தூர் பகுதியில்  அறுவடை செய்யப்படாமல் இருக்கும் வாழைத் தோட்டங்களை விவசாயிகள் தீ வைத்து எரித்து அழித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், மாதம்பட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்  வாழைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. வழக்கமாக இந்தப் பகுதியில் இருந்து கேரளாவிற்கும், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வாழை இலைகள் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கிப் போனதால், வாழை இலையின் தேவை முற்றிலும் குறைந்து போனது.

ஊரடங்கு காரணமாக கேரளாவில் இருந்து வாழை இலை கொள்முதல் செய்வதும் குறைந்து போயிருக்கிறது. இதைத்தவிர கோவை உட்பட சுற்றுவட்டார மாவட்டங்களில் திருமணம் உட்பட விஷேச நிகழ்வுகளும் நடத்தப்படாததால் வாழை இலை பறிக்கப்படாமல் வாழை மரத்திலேயே விட்ட விவசாயிகள், தற்போது வாழைத் தோட்டத்தை தீ வைத்து எரித்து அழித்து வருகின்றனர்.


Also see:

மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜ் தனக்கு  சொந்தமான 13 ஏக்கர் வாழைத் தோட்டத்தையும் இன்று தீ வைத்து எரித்து வருகின்றார். இதேபோன்று விவசாயிகள் பலரும் தங்களது தோட்டத்தில் இருந்து வாழை இலை அறுக்க முடியாததால் அவற்றை தீ வைத்து எரித்து வருகின்றனர். டிராக்டர்கள் மூலம்  வாழை தோட்டத்தை அழித்து நிலத்தைப் பண்படுத்துவதற்கு செலவு அதிகமாகும் எனவும், வாழைத் தோட்டத்தை மொத்தமாக தீ வைத்து எரித்துவிட்டால் நிலத்தைப் பண்படுத்தும் செலவு குறைவு என்பதால் தீவைத்து எரிப்பதாகவும் விவசாயி நடராஜ் தெரிவித்தார்.இந்த கொரொனா தொற்று காலத்தில் வாழை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை அழிக்க அதிக செலவு செய்ய முடியாது என்பதால் தற்போது தீ வைத்து அழித்து வருவதாகத் தெரிவிக்கன்றனர் தொண்டாமுத்தூர் பகுதி வாழை விவசாயிகள்.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading