மாதவிடாய் பிரச்னையால் அவதிப்பட்ட மாணவி மரணம் - சித்த மருத்துவ சிகிச்சை காரணம்?

News18 Tamil
Updated: June 17, 2019, 10:05 PM IST
மாதவிடாய் பிரச்னையால் அவதிப்பட்ட மாணவி மரணம் - சித்த மருத்துவ சிகிச்சை காரணம்?
மாணவி மரணம்
News18 Tamil
Updated: June 17, 2019, 10:05 PM IST
கோவையில் தவறான சித்த மருத்துவ சிகிச்சையால் கல்லூரி மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை புதூரைச் சேர்ந்த சத்யபிரியா, மாதவிடாய் பிரச்னைக்காக செல்வபுரம் பகுதியில் உள்ள மனோன்மணி சித்த வைத்திய சாலையில், சித்த மருத்துவர் குருநாதனிடம் சிகிச்சை எடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்கள் சிகிச்சை எடுத்த நிலையில் மாணவியின் உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாணவி ஏப்ரல் 22-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்தபோது மாணவிக்கு இரு சிறுநீரகங்களும் நுரையீரலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற்று வந்த சத்யபிரியா இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் சாலைமறியலில் இறங்கினர்.

மாணவியின் உயிரிழப்புக்கு சித்த மருத்துவர் குருநாதனே காரணமென குற்றம்சாட்டும் உறவினர்கள், குருநாதன் மீது செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆதங்கத்தை கொட்டுகின்றனர்.

புகாரில் சிக்கிய இந்த சித்த வைத்திய சாலை 20 ஆண்டுகளுக்கு மேலாக செல்வபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில், உறவினர்கள் அளித்த சித்த மருந்துகளின் மாதிரிகள் சோதனைக்காக மாவட்ட சித்த மருத்துவ அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு வந்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், செல்வபுரம் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதனிடையே, உயிரிழந்த மாணவிக்கு மாதவிடாய் பிரச்சினைக்கான மருத்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும், சித்த மருத்துவ கவுன்சில் தங்களிடம் விசாரணை நடத்தியதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொடுத்து இருப்பதாகவும் மனோன்மணியம் சித்தமருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...