பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் ஆள்மாறாட்டம் ? காஞ்சிபுரம், தருமபுரி மாணவர்களிடம் விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழை சரிபார்க்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது.

பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் ஆள்மாறாட்டம் ? காஞ்சிபுரம், தருமபுரி மாணவர்களிடம் விசாரணை
கோப்பு படம்
  • News18
  • Last Updated: September 26, 2019, 1:08 PM IST
  • Share this:
கோவை பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழை சரிபார்க்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி மீது சந்தேகம் எழுந்தது.


இவர்களது கல்லூரி ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் மற்றும் சேர்க்கை சான்றிதழ்களில் புகைப்படம் ஒரே மாதிரியாக இருந்த போதும், நீட் தேர்வு புகைப்படம் வேறு மாதிரி இருப்பதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவர் மற்றும் தருமபுரியைச் சேர்ந்த மாணவி குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு கல்லூரி நிர்வாகம் அறிக்கை அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து மாணவர்கள் இருவரும் சென்னை வந்துள்ளனர். மாணவர் மற்றும் மாணவி இருவருமே நீட் நுழைவுத்தேர்வின் போது நீளமான முடி வைத்திருந்ததாகவும், அதனை தற்போது சிறியதாக வெட்டிவிட்டதாகவும் கூறியுள்ளனர். அத்துடன், பள்ளிக் காலத்தில் உடல் பருமனாக இருந்ததாகவும், தற்போது உடல் மெலிந்ததால் கல்லூரிக்கான சேர்க்கை சான்றிதழில் புகைப்படம் வேறு மாதிரியாக இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளனர்.உண்மைத்தன்மை உறுதியாகும் வரை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பயிலும் இந்த  2 மாணவர்களின் மருத்துவக் கல்விக்கான பதிவு உறுதிபடுத்தப்படாது என எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் கூறியுள்ளார்.

டிசம்பர் இறுதிக்குள் அந்த இரண்டு மாணவர்களின் உண்மைத்தன்மையும் உறுதிபடுத்தப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Also see...

First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading