பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து கோவையில் போராட்டம்

Youtube Video

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக, அனைத்து ஜமாத் மற்றும் அரசியல் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் தீர்ப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

  போராட்டத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புகள் செய்யப்பட்டிருந்தது.
  Published by:Sankar
  First published: