தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம்... தவித்த அரசுப்பள்ளி மாணவர் - கல்விக்கட்டணத்திற்கு பொறுப்பேற்ற கோவை காவல் ஆய்வாளர்

நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை  ஏற்று கோவை மாநகர  காவல்  ஆய்வாளர் சாஸ்தா சோமசேகரன்  ஒரு மாணவரின் கல்வி கட்டணத்தை ஏஏற்றுக்கொண்டு இருப்பது குறிப்பிடதக்கது.

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம்... தவித்த அரசுப்பள்ளி மாணவர் - கல்விக்கட்டணத்திற்கு பொறுப்பேற்ற கோவை காவல் ஆய்வாளர்
கோவை மாநகர  காவல்துறையில் பணிபுரியும் ஆய்வாளர் சாஸ்தா சோமசேகரன்
  • News18
  • Last Updated: November 21, 2020, 1:21 PM IST
  • Share this:
அரசு பள்ளியில் படித்து மருத்துவகல்லூரியில் இடம் கிடைத்து கட்டணம் கட்ட முடியாமல் இருக்கும் ஒரு  மாணவரின் கல்வி கட்டணத்தை  ஏற்பதாக கோவை மாநகர  காவல்துறையில் பணிபுரியும் ஆய்வாளர் சாஸ்தா சோமசேகரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சாஸ்தா சோமசேகரன். தற்போது விடுப்பில் இருக்கும் சாஸ்தா சோமசேகரன் தனது முகநூல் பக்கத்தில் மருத்துவ கல்லூரியில் சேரும் ஏழை மாணவரின் கல்வி கட்டணத்தை ஏற்பதாக  பதிவு செய்துள்ளார்.

அரசு பள்ளியில்  படித்து, மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும், கல்வி கட்டணம் செலுத்த முடியாத ஒரு மாணவரின் கல்வி கட்டணத்தை ஏற்கின்றேன் எனவும், உதவி தேவைபடும்  மாணவர்கள் 9655209000 என்ற எண்ணில் தன்னை தொடர்பு கொண்டால்  உதவுவதாகவும்  ஆய்வாளர் சாஸ்தா சோமசேகரன் அதில் தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவ கல்வி கட்டணம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, அரசு பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைத்தும்  கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவ, மாணவிகளின் கட்டணத்தை நடிகர்கள், அரசியல்வாதிகள், வழகறிஞர்கள்  ஏற்க வேண்டும் என நீதிமன்றம் கருத்து  தெரிவித்து இருந்தது.

Also read... ஃபேஸ்புக்கில் காதலிப்பதாக கூறி காவலர் ஏமாற்றியதால் சிறுமி தீக்குளிப்புஇந்நிலையில் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை  ஏற்று கோவை மாநகர  காவல்  ஆய்வாளர் சாஸ்தா சோமசேகரன்  ஒரு மாணவரின் கல்வி கட்டணத்தை ஏற்றுக்கொண்டு இருப்பது குறிப்பிடதக்கது.ஆய்வாளர் சாஸ்தா சோமசேகரனின்  சகோதரர் சாஸ்தா இந்துசேகரனும் காவல் துறையில்  உதவி ஆய்வாளராக  பணிபுரிந்து வருகின்றார். சகோதரர்கள் இருவரும் சேர்ந்து காங்கேயம்  பகுதியில் நரிகுறவர் இன சிறுவர்கள் 6 பேரின் கல்விக்கு உதவி வருகின்றனர். மேலும் சகோதரர்கள்  இருவரும் சேர்த்து அறக்கட்டளை துவங்கி கல்வி பயில உதவும் ஏழை மாணவர்களுக்கு உதவவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடதக்கது.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading