பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசியது ஏன்? சரணடைந்த இளைஞர் அளித்த வாக்குமூலம்

கோவையில் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி அவமதித்ததாக சரணடைந்த இளைஞரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசியது ஏன்? சரணடைந்த இளைஞர் அளித்த வாக்குமூலம்
கைதான இளைஞர்
  • News18
  • Last Updated: July 17, 2020, 8:16 PM IST
  • Share this:
கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசப்பட்டதற்கு அரசியல்கட்சி தலைவர்கள் ஸ்டாலின், ராமதாஸ், வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், சரத்குமார், ஜவாஹிருல்லா, விஜய காந்த், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர்.

இந்நிலையில், போத்தனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அருண் கிருஷ்ணன் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரத்தில் தானாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர் பாரத்சேனா அமைப்பை சேர்ந்தவர் ஆவார்.


இது தொடர்பாக போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில், இந்து கடவுள் முருகனை பற்றி இழிவாக பேசியதற்கு எதிர்ப்பை தெரிவிக்க பெரியார் சிலை மீது காவிச்சாயத்தை வீசியதாக தெரிவித்துள்ளார்.
படிக்க: கொரோனா தொற்று உள்ளதா என 15 நிமிடங்களில் கண்டறியும் ஆன்டிபாடி சோதனை - பொதுமக்களுக்கு எப்போது?படிக்க: பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..
இதனையடுத்து 3 பிரிவின் கீழ் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் அருண் கிருஷ்ணனை, நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading