கோவை: பத்மஸ்ரீ விருதுபெற்ற அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழக வேந்தர் கிருஷ்ணகுமார் காலமானார்..
உயிரிழந்த பத்மஸ்ரீ கிருஷ்ணகுமார் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்களுக்கு நெருக்கமானவர். பிரபல அரசியல் தலைவர்கள் பலர் இவரிடம் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தனர்.

வேந்தர் கிருஷ்ணகுமார்
- News18
- Last Updated: September 17, 2020, 11:28 AM IST
கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழக வேந்தர் கிருஷ்ணகுமார் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
கேரளா மற்றும் கோவையில் ஆர்ய வைத்திய சாலை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வந்தவர் டாக்டர் கிருஷ்ணகுமார். கேரளாவில் ஆயுர்வேதம் படித்த இவர் பின்னர் கேரளா மற்றும் கோவையில் சிகிச்சை மையங்களை நடத்தி வந்தார்.
கடந்த 2009 ம் ஆண்டு இவருக்கு பத்ம ஸ்ரீ விருதானது வழங்கப்பட்டது. மேலும் இவரது ஆயுர்வேத சேவைகளை பாராட்டி 2011 ம் ஆண்டு இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் கர்நாடக மாநில குவேம்பு பல்கலைகழகத்தால் வழங்கப்பட்டது. இவர் ஆர்ய வைத்திய பார்மஸியின் கிளைகளை பல்வேறு மாநிலங்களில் நிறுவி நடத்தி வந்தார். கடந்த 2015 முதல் கோவை அவனாசிலிங்கம் மகளிர் பல்கலையின் வேந்தராகவும் பத்மஸ்ரீ கிருஷ்ணகுமார் இருந்து வந்தார்.
68 வயதான கிருஷ்ணகுமார் கடந்த சில நாட்களுக்கு இருதய பிரச்சினைக்காக கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரொனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து கொரொனா தொற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை இரவு பத்மஸ்ரீ கிருஷ்ணகுமார் உயிரிழந்தார். பா.ஜ.க துணைதலைவர் வானதி சீனிவாசன், கிருஷ்ணகுமார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.Also read... பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இந்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு..
உயிரிழந்த பத்மஸ்ரீ கிருஷ்ணகுமார் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்களுக்கு நெருக்கமானவர். பிரபல அரசியல் தலைவர்கள் பலர் இவரிடம் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தனர்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அடிக்கடி பத்மஸ்ரீ கிருஷ்ணகுமாரிடம் சிகிச்சை பெறுவதற்காக ஆர்ய வைத்திய பார்மஸி மருத்துவமனைக்கு வந்து செல்வது குறிப்பிடதக்கது.
கொரொனா தொற்று காரணமாக பத்மஸ்ரீ கிருஷ்ணகுமார் உயிரிழந்து இருப்பதால் , விதிமுறைகளின் படி அடக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கேரளா மற்றும் கோவையில் ஆர்ய வைத்திய சாலை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வந்தவர் டாக்டர் கிருஷ்ணகுமார். கேரளாவில் ஆயுர்வேதம் படித்த இவர் பின்னர் கேரளா மற்றும் கோவையில் சிகிச்சை மையங்களை நடத்தி வந்தார்.
கடந்த 2009 ம் ஆண்டு இவருக்கு பத்ம ஸ்ரீ விருதானது வழங்கப்பட்டது. மேலும் இவரது ஆயுர்வேத சேவைகளை பாராட்டி 2011 ம் ஆண்டு இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் கர்நாடக மாநில குவேம்பு பல்கலைகழகத்தால் வழங்கப்பட்டது.