கோவை சிறுமுகையில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு - கடந்த 2 நாட்களில் 3 யானைகள் இறப்பு

கோவையில் உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்த ஆண் யானை, இன்று உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை சிறுமுகையில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு - கடந்த 2 நாட்களில் 3 யானைகள் இறப்பு
இறந்த யானை
  • News18
  • Last Updated: July 3, 2020, 5:15 PM IST
  • Share this:
கோவை மேட்டுப்பாளையம் அருகே கண்டியூரில் நேற்று உயிரிழந்து கிடந்த பெண் யானையை உடற்கூராய்வு செய்ததில் அது சுட்டுக்கொல்லப்பட்டது அம்பலமானது.

நெல்லிமலை காட்டில் இருந்து வெளியேறிய யானை ஊருக்குள் புக முற்பட்ட நிலையில் காது அருகே காயத்துடன் இறந்து கிடந்தது. தகவலறிந்த வனத்துறையினர் யானையின் உடலை உடற்கூராய்வு செய்ய ஏற்பாடு செய்தனர். இதில் தலையில் துப்பாக்கியால் சுட்டு யானை கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக யானை இறந்து கிடந்த தோட்டத்தின் உரிமையாளர்கள் ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருவதாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

இந்த நிலையில், மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது. சிறுமுகை பெத்திகுட்டை பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆண் யானைக்கு கடந்த 6 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.





படிக்க: துக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா - இன்று மேலும் 19 பேருக்கு தொற்று உறுதி

படிக்க: டிக்-டாக் செயலி தடையால் ₹45,000 கோடி இழப்பு... சீன அரசு ஊடகம் தகவல்








மேலும், கோவை வனக்கோட்டத்தில் மட்டும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மொத்தம் 15 யானைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமுகை வனச்சரகத்தில் கடந்த இரு தினங்களில் இறக்கும் மூன்றாவது யானை இது ஆகும். கோவை வனக்கோட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 12 யானைகள் உயிரிழந்திருக்கின்றன
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading