Home /News /tamil-nadu /

இளைஞர்களை 100 திருக்குறள் எழுதவைத்து நூதன தண்டனை வழங்கிய கோவை போலீஸார்

இளைஞர்களை 100 திருக்குறள் எழுதவைத்து நூதன தண்டனை வழங்கிய கோவை போலீஸார்

கோவை

கோவை

இளைஞர்கள் அனைவரும் காவல் நிலைய வளாகத்திலேயே திருக்குறளை படித்து எழுதி காட்டினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கோவை மாவட்டம் மதுக்கரைகோவில் திருவிழாவில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட  இளைஞர்கள் 10 பேரை பிடித்து 100 திருக்குறள் எழுதவைத்து  மதுக்கரை போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த மரப்பாலம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று  சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு  ஜமாப் மேளம் வாசிக்கப்பட்டது.இதற்கு  உள்ளூர் இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது  நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

இந்த மோதல் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுக்கரை போலீசார் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ன  உதவி ஆய்வாளர் கவியரசன்  இளைஞர்கள் ஓவ்வொருவரும்  தலா 100 திருக்குறள்களை மனப்பாடம் செய்து  எழுத சொல்லி நூதன தண்டனை வழங்கினார்.

இதையடுத்து இளைஞர்கள் அனைவரும் காவல் நிலைய வளாகத்திலேயே திருக்குறளை படித்து எழுதி காட்டினர். இதன் பின்னர் இளைஞர்களுக்கு  அறிவுறை வழங்கிய காவல் துறையினர் பொது இடங்களில் சண்டையிடக்கூடாது என அறிவுரை வழங்கி  அனுப்பி வைத்தனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Coimbatore, Police, Thirukkural

அடுத்த செய்தி