• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிகம் பேச மாட்டேன்... செயலில் பாருங்க...: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பேச மாட்டேன்... செயலில் பாருங்க...: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனின் அரசாக திமுக அரசு உள்ளது. வாக்கு அளித்த மக்களுக்கு மட்டுமின்றி, எதிராக வாக்களித்த மக்களுக்கு சேர்த்தே பணியாற்றி வருகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

  • Share this:
    கோவையில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் பேசுவது மிகவும் குறைவு என்றும் செயலில் தனது பணி இருக்கும் என்றும் கூறினார்.

    கோவையில் 89.73 கோடி ரூபாய் மதிப்பில் 128 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். மேலும்,  587 கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட 70 திட்ட பணிகளை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், சென்னையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விமானம் மூலம் கோவை வந்து சாலைமார்க்கமாக விழா நடக்கும் நிகழ்வுக்கு வருவதற்கு கால தாமதம் ஆகிவிட்டதாக குறிப்பிட்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், தொழில் மூலம் தமிழகத்திற்கு ஏற்றுமதி வருவாயை வழங்குவது கோவை மாவட்டம். கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட சின்னவேடம்பட்டி, வெள்ளகிணறு ஆகிய பகுதிகளில் ரூ.332 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்படும். சென்னைக்கு நிகராக கோவைக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். கோவை நகருக்குள் செயல்படும் சிறைச்சாலையை நகருக்கு வெளியே மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்தியாவிலேயே தொழில்துறையில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை வார்த்தெடுக்க வேண்டும். மிகப்பெரிய திட்டங்களை நாங்கள் செயல்படுத்தினாலும் ஒவ்வொரு தனி மனிதனின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் முக்கியம். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனின் அரசாக திமுக அரசு உள்ளது.
    வாக்கு அளித்த மக்களுக்கு மட்டுமின்றி, எதிராக வாக்களித்த மக்களுக்கு சேர்த்தே பணியாற்றி வருகிறோம். அனைத்து மாவட்ட மக்களும் எங்கள் மக்கள்தான். நான் அதிகம் பேச மாட்டேன். செயலில் எனது பணி இருக்கும்” என்று பேசினார்.

    இதையும் படிங்க: மேடைக்கு வாங்க... வானதி சீனிவாசனை அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: