திருட முயற்சியா...? வேறு எதுவுமா...? நள்ளிரவில் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் நபரால் கோவை மக்கள் பீதி

திருட முயற்சியா...? வேறு எதுவுமா...? நள்ளிரவில் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் நபரால் கோவை மக்கள் பீதி
CCTV காட்சியில் பதிவான உருவம்
  • News18
  • Last Updated: January 18, 2020, 3:47 PM IST
  • Share this:
கோவையில் சுவர் ஏறிக் குதித்து வந்து ஜன்னல் வழியே வீட்டை நோட்டமிடும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத ஒரு நபரின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்நபர் மருதம் நகர், பாரதி காலணி ஆகிய இடங்களில் 3 வீடுகளில் திருட முயற்சித்தாக தெரிகிறது. இரு சக்கர வாகனத்தில் வரும் நபர், சுவர் ஏறி குதித்து வந்து ஜன்னல்களை எட்டி பார்ப்பது போன்ற காட்சிகள்  சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
First published: January 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்