திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் மீது ஒரு வழக்கும் என இரண்டு வழக்குகள் தனி தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
கோவையில் காவல் துறையை கண்டித்து , தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவையில் திமுக தலைவர்களை கேலியாக சித்தரித்து ஒட்டப்பட்ட நோட்டீஸ்களை கிழித்த திமுகவினரை கைது செய்த காவல்துறையினரை கண்டித்து இன்று காலை திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைக்க அனுமதி மறுத்த போதும், தடையை மீறி மேடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் இன்று இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது ஒரு வழக்கும் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் மீது ஒரு வழக்கும் என இரண்டு வழக்குகள் தனி தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின், கார்த்திக் MLA, சி.ஆர்.ராமச்சந்திரன், பையா கவுண்டர், சேனாதிபதி , தென்றல் செல்வராஜ், பைந்தமிழ் பாரி ,கோட்டை அப்பாஸ் , பொள்ளாச்சி எம்.பி. சண்முக சுந்தரம் ஆகிய 9 பேர் மீது தடை உத்தரவை மீறுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல்,  சமூக இடைவெளியை கடைபிடிக்காதது , நீட் தேர்வு குறித்து கிராம புற மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 5 சட்டப்பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Published by:Vijay R
First published: