ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோவை  கார் வெடிப்பு சம்பவம்: கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை

கோவை  கார் வெடிப்பு சம்பவம்: கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை

கைது செய்யப்பட்ட 6 பேர்

கைது செய்யப்பட்ட 6 பேர்

சிறையில் உள்ள ஆறு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவை  கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு பேரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் நேற்று மத்திய சிறையில் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை தற்பொழுது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கார் வெடிப்பு வழக்கு தமிழக காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் , அவர்களை காவலில் எடுத்து  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று நேரடியாக கோவை மத்திய சிறைக்கு சென்று ஆறு பேரிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி: கோவை, திருப்பூரில் தடை விதிப்பு

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜமிஷா முபீனின் உறவினர்கள் அசாரூதின், அப்சர்கான் ஆகியோரிடமும், வீட்டை காலி செய்ய உதவிய பெரோஸ், நிவாஸ், ரியாஸ் ஆகியோரிடமும், கார் கொடுத்த முகமது தல்ஹாவிடமும் தேசிய பாதுகாப்பு முகமை் அதிகாரிகள் விசாரணை நடத்திச் சென்றுள்ளனர். இதனிடையே சிறையில் உள்ள ஆறு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Published by:Arunkumar A
First published:

Tags: Coimbatore, Coimbatore Central Prison, NIA