ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு.. தீவிரவாத தாக்குதல்..'' கோவை கார் சிலிண்டர் வெடிப்புக்கு அண்ணாமலை அறிக்கை!

''ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு.. தீவிரவாத தாக்குதல்..'' கோவை கார் சிலிண்டர் வெடிப்புக்கு அண்ணாமலை அறிக்கை!

அண்ணாமலை

அண்ணாமலை

மேலும் அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் இது தீவிரவாத தாக்குதல் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதலே என்பதை தமிழ்நாடு அரசு இனியும் மூடி மறைக்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமோசா முபின் என்பவர் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் ஜமோசா முபின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்கள் கிடைத்தது. மேலும் வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்களும் இறந்தவர் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன.

  இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சி பதவியேற்ற நாள் முதல் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவிவருவதாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு சென்று, முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளதை குறிப்பிட்டுள்ள அவர், ‘இது விபத்து தான் குண்டு வெடிப்பு இல்லை’ காவல்துறை இதுவரை உறுதிபடுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் இது தீவிரவாத தாக்குதல் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

  மேலும், சிலிண்டர் எங்கிருந்து வருகிறது என்பதை விசாரிக்க 6 தனிப்படை அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய அவர், இதனை விபத்து என்று எளிதாக கடந்து செல்லமுடியாது என தெரிவித்துள்ளார்.

  கடந்த மாதம், பாஜக தலைமை அலுவலகத்தின் மீது குண்டு வீசப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் ஒரு கட்சிக்கான பாதுகாப்பு இதுதான் என விமர்சனம் செய்துள்ளார். திமுக ஆட்சியில் குண்டுவெடிப்பு என்பது புதிதல்ல என்றும், 1998ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்த குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்ததை பொதுமக்கள் மறக்கமாட்டார்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  இதனை உளவுத்துறையின் தோல்வி என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் தமிழ்நாடு காவல்துறை எந்தவித பாகுபாடுமின்றி உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Annamalai, Coimbatore