ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கார் சிலிண்டர் வெடித்து இறந்த ஜமேஷா முபினின் சிசிடிவி காட்சி.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

கார் சிலிண்டர் வெடித்து இறந்த ஜமேஷா முபினின் சிசிடிவி காட்சி.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

வெளியான சிசிடிவி காட்சி

வெளியான சிசிடிவி காட்சி

Coimbatore | சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், ஜமேஷா முபின் உடன் இருந்த 4 பேர் யார் என விசாரித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore | Coimbatore | Tamil Nadu

  கோவையில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த ஜமேஷா முபின் சனி இரவு வீட்டிலிருந்து வெளியேறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

  கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த நபரின் அடையாளம் தெரிந்த நிலையில், புதிய திருப்பமாக அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பாக குன்னூரை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு, காரின் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில், விசாரணைக்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

  இந்நிலையில், கார் வெடிவிபத்தில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே அவரிடம் 2019ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

  ALSO READ | குழந்தைகள் விளையாடும் போலி பணத்தை கொண்டு கோடி கணக்கில் மோசடி.. போலீசில் சிக்கியது எப்படி?

  இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர் உள்ளிட்ட நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், விபத்துக்குள்ளான கார் இதுவரை 9 பேரிடம் கைமாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார். சந்தேக மரணம், வெடிமருந்து சட்டம் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு கூறினார். மேலும் பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்களுடன், ஜமேசாவுக்கு தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.

  இந்த நிலையில், சிலிண்டர் வெடித்து இறந்த ஜமேஷா முபின் சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியேறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  இந்த சிசிடிவி காட்சிகள் ஜமேஷா முபின் உள்ளிட்ட 5 பேர் இருக்கின்றனர். அவர் உடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Coimbatore, Crime News, Death, Gas cylinder blast