ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கார் சிலிண்டர் வெடி விபத்து: கைது செய்யப்பட்ட 5 பேர் மீது பாய்ந்தது உபா சட்டம்

கார் சிலிண்டர் வெடி விபத்து: கைது செய்யப்பட்ட 5 பேர் மீது பாய்ந்தது உபா சட்டம்

கைது செய்யப்பட்ட 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது

கைது செய்யப்பட்ட 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது

கைது செய்யப்பட்ட 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் கூட்டு சதி, 120பி, 153ஏ மற்றும் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒரு சிலரை என்.ஐ.ஏ விசாரித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று முன் தினம் (23.10.2022) அதிகாலை 4 மணிக்கு, காரின் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில், விசாரணைக்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

  கார் வெடிவிபத்தில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே அவரிடம் 2019ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. ஜமேசா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நாட்டு வெடிகுண்டு செய்வதற்கான மூலப் பொருட்கள் அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.

  இந்த சம்பவம் தொடர்பாக கோவை உக்கடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஜமேஷா முபீன் வீட்டில் வெடிபொருட்கள் கைபற்றபட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை காவல் ஆணையர் பாலாகிருஷ்ணன், இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்த்னோம் என்றும், சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் விசாரணை நடத்தியும் அவர்களது வீட்டில் சோதனை நடத்தி நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக தெரிவித்தார். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே உள்ள கோவிலில் காவல்துறையினர் ரோந்து சென்றதாகவும், சம்பவம் நடைபெற்ற உடனே உயிரிழப்புகள் எதும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாக காவல் ஆணையர் தெரிவித்தார்.

  இதையும் படிங்க: தீபாவளி டாஸ்மாக் வசூல் நிலவரம்: ட்விட்டரில் சண்டை செய்யும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை!

  சம்பவம் நடைபெற்ற உடன் தீபாவளி பண்டிகை என்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கை எடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இந்த சூட்டுச்சதியில் வேறு யாருக்கு தொடர்ப்பு இருக்கிறா என விசாரித்து வருவதாகவும், தடவியல் அதிகாரிகளின் அறிக்கைக்காக காத்திருப்பதாக கூறினார்.

  மேலும் குற்றவாளிகள் 2 சிலிண்டர்கள்,3 டிரம்களை அவர்கள் எடுத்து சென்ற சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது என கூறிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், டிரம்களில் என்ன் இருந்தது என்பது தொடர்பாக தடயவியல் சோதனை நடைபெற்று வருவதாகவும், உயிரிழந்த ஜமேசா முபீன் வீட்டில் இருந்து ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட 75 கிலோ வேதிப் பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரத்தில் இறந்த நபர் யார் என்பது குறித்து கண்டுபிடிக்கப்பட்டது என்றும், வெடித்த கார் 10 பேரிடம் கைமாறி இருப்பது அவர்கள் அனைவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த கார் யாருடையது என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் கூட்டு சதி, 120பி, 153ஏ மற்றும் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒரு சிலரை, என்.ஐ.ஏ விசாரித்துள்ளது. அவர்கள் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என கோவை மாவட்ட காவல ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Coimbatore