Home /News /tamil-nadu /

கோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்?

கோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்?

Youtube Video

கோவை விமான நிலையத்தில் உள்ள கழிப்பறை ஒன்றில் 6 துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டள்ளது. சோதனைக்கு பயந்து துப்பாக்கித் தோட்டாவை மறைத்தது யார்?

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை இயக்கப்படுகிறது. அதேபோல சிங்கப்பூர், ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களுக்கும் விமானங்கள் சென்று வருகின்றன. தற்போது கொரோனா தொற்று பரவ காரணமாக, சர்வதேச விமானங்கள் குறைந்தளவே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகளின் வரத்து குறைவாகவே உள்ளது. இந்நிலையில், விமான நிலையத்தின் உள்நாட்டு விமானங்கள் புறப்படும் பகுதிக்கு அருகேயுள்ள ஆண்கள் கழிவறையில் தூய்மை பணியாளர் செல்வம் என்பவர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது கழிவறையின் உள்பகுதியில் துப்பாக்கித் தோட்டாக்கள் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    மேலும் படிக்க...சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்..

    அங்கு சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கித் தோட்டாக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ஒரு எஸ்.எல்.ஆர்., ரக துப்பாக்கி தோட்டாவும், மூன்று 9 எம்.எம்., துப்பாக்கி தோட்டாக்களும், இரு போலி தோட்டாக்களும் இருந்து தெரியவந்தது. இது தொடர்பாக பீளமேடு காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.



    தகவலின்பேரில் வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார், தோட்டாக்களை கைப்பற்றி, விமான நிலைய கழிப்பறையில் தோட்டாக்களை போட்டுச் சென்றது யார்? பாதுகாப்பு மிக்க விமான நிலைய எல்லைக்குள் எப்படி துப்பாக்கி தோட்டாக்கள் எடுத்து வரப்பட்டது ? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Airport, Coimbatore, Gun

    அடுத்த செய்தி