Home /News /tamil-nadu /

பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் கைதான இளைஞரின் குடும்பத்துக்கு ₹50 ஆயிரம் நிதியுதவி அளித்த பாஜக

பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் கைதான இளைஞரின் குடும்பத்துக்கு ₹50 ஆயிரம் நிதியுதவி அளித்த பாஜக

பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் கைதான அருண் கிருஷ்ணன் குடும்பத்தினர்

பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் கைதான அருண் கிருஷ்ணன் குடும்பத்தினர்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் குடும்பத்திற்கு பாஜக தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஐம்பதாயிரம் நிதியுதவி அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றிய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் குடும்பத்திற்கு பாஜக தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஐம்பதாயிரம் நிதியுதவி அளித்துள்ளனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது கடந்த ஜூலை 17-ஆம் தேதி காவிச்சாயம் ஊற்றப்பட்டது. இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் கலகம் ஏற்படுத்துதல், விரோத உணர்ச்சியை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தேடிவந்த நிலையில், போத்தனூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் (21) போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அருண் கிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அருண் கிருஷ்ணனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டார். இதனிடையே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட அருண் கிருஷ்ணன் குடும்பத்திற்கு, பாஜக தொழில்நுட்ப பிரிவு சார்பாக ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவி நேற்று அவரது இல்லத்தில் கிருஷ்ணனின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.
Published by:Gunavathy
First published:

Tags: BJP, Periyar, Periyar Statue

அடுத்த செய்தி