Home /News /tamil-nadu /

பாரதியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் செய்தியாளர்களுக்கு பணம் தரப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்டும் - துணைவேந்தர் காளிராஜ்

பாரதியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் செய்தியாளர்களுக்கு பணம் தரப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்டும் - துணைவேந்தர் காளிராஜ்


பாரதியார் பல்கலை. பட்டமளிப்பு விழா

பாரதியார் பல்கலை. பட்டமளிப்பு விழா

கோவை பாரதியார் பல்கலைக்கழக  பட்டமளிப்பு விழாவில்  செய்தியாளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக 37வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் 40 இருக்கைகள்  பத்திரிக்கையாளர்களுகு ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் போது செய்தி தொடர்பான தகவல் அடங்கிய பைல்கள் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் தகவல்கள் அடங்கிய பேப்பர்களுடன் ,   பதிவாளரின் பெயர்  கொண்ட கவரில் பணம் வைத்து வழங்கப்பட்டது. அனைத்து இருக்கைகளிலும் செய்தியாளர்களுக்கு இந்த பைல் வழங்கப்பட்ட நிலையில், அதில்  பணம்   வைத்து வழங்கப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பிற்பகல் பட்டமளிப்பு விழா நிறைவடைந்த நிலையில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம்  பத்திரிக்கையாளர்களுக்கு லஞ்ச பணம் கொடுக்கப்பட்டது குறித்து முறையிட்டனர்.இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் இது குறித்து விசாரித்து தவறிழைத்தவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Also Read : ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு... மாற்றம், திருத்த செய்ய சூப்பர் சான்ஸ்

பெட்ரோல்  அலவுன்ஸ்ஸாக கொடுத்து இருப்பார்கள் என துணைவேந்தர் காளிராஜ் கூறியதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தன்னுடன் இருந்த பாதுகாவலரிடம் பணத்தை கொடுத்து விடும்படியும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்த பின் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெரிவிப்பதாகவும் துணைவேந்தர் காளிராஜ் தெரிவித்தார். இதனையடுத்து பத்திரிகையாளர்கள் பணத்துடன் கொடுத்த கவரை திரும்பி ஓப்படைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
Published by:Vijay R
First published:

Tags: Bharathiar University, Coimbatore, RN Ravi

அடுத்த செய்தி