கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை

கோவை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

news18
Updated: August 7, 2019, 10:30 AM IST
கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை
கோவை குற்றாலம்
news18
Updated: August 7, 2019, 10:30 AM IST
கோவை குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் நீர் வரத்து அதிகமாகி கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் கோவை குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் அதிக குளிர் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மூன்றாவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 40.5 செ.மீ, அப்பர் பவானியில் 22 செ.மீ, கூடலூரில் 10 செ.மீ, தேவாலா மற்றும் நடுவடத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also watch

Loading...

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...