கோவையில் ஜாக் பிரிவு இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் கொண்டாட்டம் - வீடுகளில் சிறப்பு தொழுகை

கோவையில் பக்ரீத் பண்டிகையினை முன்னிட்டு ஜாக் பிரிவு இஸ்லாமியர்கள் தங்களது  வீடுகளில் சிறப்பு தொழுகையில்  ஈடுபட்டனர்.

கோவையில் ஜாக் பிரிவு இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் கொண்டாட்டம் - வீடுகளில் சிறப்பு தொழுகை
News18
  • News18
  • Last Updated: July 31, 2020, 10:11 PM IST
  • Share this:
கோவையில் ஜாக் கமிட்டி பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காரணமாக வழிபாட்டு தலங்களில் ஒன்று கூட தடை இருப்பதன் காரணமாக அவர்கள் வீட்டின் மாடியில் பக்ரீத் சிறப்பு தொழுகையில்  ஈடுபட்டனர்.

தனி மனித இடைவெளியுடன் வீட்டுமாடியில் பக்ரீத் சிறப்பு தொழுகையில்  ஈடுபட்ட இஸ்லாமியர்கள், ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துகளை  தெரிவித்து கொண்டனர். இன்றைய நாளில் தங்களால் முடிந்த அளவு ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளை செய்தும், ஆடு, மாடுகளை குர்பானி கொடுத்தும் பண்டிகையினை  உற்சாகமாக கொண்டாடினர்.

நாளை சுன்னத்  ஜமாத் உட்பட  பெரும்பான்மை இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையினை  கொண்டாட இருக்கும் நிலையில், அரபு நாடுகளை பின்பற்றி ஜாக் அமைப்பினர் இன்றே பக்ரீத் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது குறிப்பிடதக்கது
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading