பள்ளி ஆன்லைன் வகுப்பில் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக கருத்து பதிவிட்ட மர்ம நபர்.. சைபர் க்ரைம் போலீசார் விசாரணை..

ஐடி மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி மர்ம நபர் வகுப்பு நடக்கும்போது உள்ளே நுழைந்து ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பள்ளி ஆன்லைன் வகுப்பில் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக கருத்து பதிவிட்ட மர்ம நபர்.. சைபர் க்ரைம் போலீசார் விசாரணை..
மாதிரிப் படம்
  • Share this:
சென்னை அண்ணாநகர் தனியார் பள்ளியொன்றில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் தெரிந்த,ஆன்லைன் வகுப்புகளுக்காக பயன்படுத்தப்படும் செயலியின்  ஐடி மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி மர்ம நபர் வகுப்பு நடக்கும்போது உள்ளே நுழைந்து ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பள்ளி நிர்வாகம்  திருமங்கலம் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளது.மாணவர்கள் இது போன்று செயலில் ஈடுபட வாய்ப்பில்லை என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.இது தொடர்பாக புதிதாக துவங்கப்பட்ட அண்ணா நகர் சைபர் காவல் நிலையத்தில் வழக்கு மாற்றப்பட்டு, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் போது ஆபாச இணையதளங்கள் மாணவர்கள் பார்த்து கெட்டுப்போக வாய்ப்புள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இது போன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading