’நீட் குறித்த சூர்யாவின் நிலைப்பாடு, தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மாறும்’ - பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை

மருத்துவக் கல்வியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகத உள் இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. சமூக வலைதளங்களில் அநாகரிகமாக விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

’நீட் குறித்த சூர்யாவின் நிலைப்பாடு, தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மாறும்’ - பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை
அண்ணாமலை, துணைத்தலைவர், பாஜக
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 3:43 PM IST
  • Share this:
நீட் தொடர்பான அறிக்கையில் சூர்யாவின் வார்த்தைகள் வரம்பை மீறியதாக இருந்ததாகவும், நீட் தேர்வின் ரிசல்ட் வந்த பிறகு, நடிகர் சூர்யாவின் நிலைப்பாட்டில் மாற்றத்தைப் பார்க்க முடியும் என்று பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள்  கோவையில் சுங்கம் பகுதியில் நடந்தது. நிகழ்வில் கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ``தமிழ்நாட்டில் அதிமுக – பா.ஜ.க கூட்டணி தொடர்கிறது. கூட்டணிக்குள் முரண்பாடுகள் வருவது சகஜமானது தான். மும்மொழி கல்வி கொள்கை விவகாரத்தில் பா.ஜ.க தெளிவாக உள்ளது” என்று தெரிவித்தார்.

’பெரியாரின் கொள்கைகளில் பலவற்றை நாங்கள் ஏற்கவில்லை. அதேநேரத்தில் மக்களின் சமூக நீதிக்காக பாடுபட்ட பெரியாரின் சில கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறோம். பிறந்தநாளின்போது, வாழ்த்து தெரிவிப்பது அரசியல் நாகரிகம். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். மாணவர்கள் மூன்று மொழிகளை படிப்பதால் அறிவுத்திறன் அதிகரிக்கும். இந்தி மொழி விவகாரத்தில் தி.மு.க இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.


'மருத்துவக் கல்வியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகத உள் இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது' என்று தெரிவித்துள்ளார்.

’நடிகர் சூர்யா நல்ல மனிதர், நல்ல நடிகர். நீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கை வரம்பை மீறியதாக இருந்தது. சூர்யாவின் கேள்விகளுக்கான விடையை நீட் தேர்வு முடிவுகள் சொல்லும். நீட் தேர்வு ரிசல்ட் வந்த பின்னர், நடிகர் சூர்யாவின் நிலைப்பாட்டில் மாறுதல் ஏற்படும்’ என்று கூறியுள்ளார்.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading