ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மீண்டும் ஆட்சிக்கு வருவோம்... ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம்: மேடையிலேயே போலீஸை மிரட்டிய அதிமுக எம்.எல்.ஏ.

மீண்டும் ஆட்சிக்கு வருவோம்... ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம்: மேடையிலேயே போலீஸை மிரட்டிய அதிமுக எம்.எல்.ஏ.

அருண்குமார் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

அருண்குமார் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

காவல் துறை அடக்கி வாசிக்கவில்லை என்றால் ரொம்ப மோசமாக போய்விடும் எனவும் மேடையிலேயே காவல் துறையினருக்கும் , அரசு அதிகாரிகளிக்கும் எச்சரிக்கை விடுக்கும் அதிமுக வடக்கு மாவட்ட  செயலாளரும் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.ஜி. அருண் குமார்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவையில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றத்தில்.  கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வடக்கு மாவட்டச் செயலாளரும் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.ஜி. அருண் குமார், கோவையில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும்  திமிர் பிடித்து அலைகின்றனர். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். எங்கு பணியில் இருந்தாலும், ஓய்வு பெற்றாலும் விட மாட்டோம்,  காவல் துறை அடக்கி வாசிக்கவில்லை என்றால் ரொம்ப மோசமாக போய்விடும் என்று மிரட்டும் தொனியில் பேசினார்.

கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.  செயல் வீரர் கூட்டத்திற்காக ஏராளமான அதிமுகவினர் கட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். அப்போது அங்கு இருந்த வாகனங்களை ஒழுங்குபடுத்த காவல் துறையினர் முயன்ற போது காவல் துறையினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாகனங்களுக்கு அபராதம் விதிக்க கூடாது எனவும், பறிமுதல் செய்யும் வாகனத்தை அப்புறபடுத்த வேண்டும் என கூறி காவல் துறையை கண்டித்து அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து சென்றார்.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.ஜி அருண் குமார் அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் ஒருமையில் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். கோவையில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும்  திமிர் பிடித்து அலைகின்றனர்.

இதையும் படிங்க: அடுத்த 10 அமாவாசைக்குள் அதிமுக மீண்டும் அரியணை ஏறும்- பொள்ளாச்சி ஜெயராமன்

 எங்கள் மீது வழக்கு போடுங்கள், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என தெரிவித்த அவர், எங்கு பணியில் இருந்தாலும், ஓய்வு பெற்றாலும் விட மாட்டோம், ஆம்பளைங்க நாங்க என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். காவல் துறை அடக்கி வாசிக்கவில்லை என்றால் ரொம்ப மோசமாக போய்விடும் எனவும் மேடையிலேயே காவல் துறையினருக்கும், அரசு அதிகாரிகளிக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். 

மேலும் படிங்க: கோவையில் நம் கூட்டத்தை பார்த்து கோட்டையே நடுங்க வேண்டும் - எஸ்.பி.வேலுமணி 

First published:

Tags: ADMK, AIADMK, Coimbatore